Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்போலீசாரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்! புதுச்சேரி டி.ஜி.பி. மனோஜ்குமார் லால் உத்தரவு

    போலீசாரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்! புதுச்சேரி டி.ஜி.பி. மனோஜ்குமார் லால் உத்தரவு

    புதுச்சேரி மோட்டார் சைக்கிளில் செல்லும் போலீசார் அனைவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. மனோஜ்குமார் லால் உத்தரவிட்டுள்ளார்.

    புதுச்சேரி போலீசார், அரசு ஊழியர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணியவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் போலீசாரின் அறிவிப்பை பொதுமக்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனிடையே ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி பொதுமக்களுக்கு அவ்வப்போது போலீசார் அபராதம் விதித்து வந்தனர். ஆனால் அரசு அறிவிப்பின்படி போலீசாரும், அரசு ஊழியர்களும் ஹெல்மெட் அணியாமலேயே 2 சக்கர வாகனங்களில் சென்று வந்தனர். இது பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    அவர்கள் அபராதம் விதித்த போலீசாரிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முதலில் போலீசார் ஹெல்மெட் அணியுங்கள், பின்னர் பொதுமக்களிடம் வாருங்கள் என்று தெரிவித்தனர். இதுதொடர்பான தகவல்கள் போலீஸ் டி.ஜி.பி.க்கும் சென்றன. இதைத்தொடர்ந்து உயர் போலீஸ் அதிகாரிகளை அழைத்த போலீஸ் டி.ஜி.பி. மனோஜ்குமார் லால் மோட்டார் சைக்கிளில் செல்லும் போலீசார் அனைவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும்.

    அதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று உத்தர விட்டார். மேலும் ஹெல்மெட் அணியாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து வயர்லெஸ் வழியாக அதிகாரிகள் டி.ஜி.பி.யின் உத்தரவை போலீசாருக்கு தெரிவித்தனர். இதன் காரணமாக தற்போது போலீசார் ஹெல்மெட் அணிய தொடங்கியுள்ளனர்.

    என்னம்மா வித்த காட்றானுங்க பாருங்க! தண்ணீரில் மூழ்காமல் வாக்கிங் போன பல்லி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....