Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇனி மின் மீட்டருக்கும் மாத வாடகையா?

    இனி மின் மீட்டருக்கும் மாத வாடகையா?

    வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் மின் மீட்டருக்கும் மாத வாடகை வசூலிக்க தமிழக மின்வாரியம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    மின் பயன்பாட்டை அளவிடப் பயன்படும் மின் மீட்டருக்கு மாதந்தோறும் ரூ.60 என, இரண்டு மாதத்துக்கு ஒரு முறை ரூ.120 வாடகையாக வசூலிக்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்சார வாரியம் அனுமதி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில், அதற்கு அனுமதி கிடைத்துவிட்டால், மின் நுகர்வோர்கள் செப்டம்பர் மாதம் முதல் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை மின் மீட்டருக்கான வாடகையாக 120 ரூபாய் செலுத்த நேரிடும். 

    இந்தக்கட்டணம் டிஜிட்டல் மீட்டர்களுக்கு மட்டுமே பொருந்தும். எதிர்காலத்தில் ஸ்மார்ட் மின் கட்டண மீட்டர்களைப் பொறுத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு வேளை அப்படி ஏதும் நடந்துவிட்டால், அதற்கு மாத வாடகையாக ரூ.350 வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

    இதுமட்டுமல்ல, சேதம் அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் பழுதடையும் மின் மீட்டர்களை மாற்றுவது அல்லது மின் மீட்டர்களை வேறு இடத்துக்கு மாற்றுவது போன்ற பணிகளுக்கான கட்டணத்தையும் 100 சதவீதம் உயர்த்திக் கொள்ளவும் மின் வாரியம் அனுமதி கேட்டுள்ளது. 

    தற்போது, மின் மீட்டரை மாற்றுவது மற்றும் வேறு இடத்தில் மாற்றம் செய்வதற்கு சிங்கிள் பேஸ் எனப்படும் ஒரு முனை மின் இணைப்புக் கொண்ட மின் நுகர்வோர்களுக்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 

    அதேபோல், மும்முனை மின் இணைப்பு கொண்ட மின் நுகர்வோர்களுக்கு ரூ.750  கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனை முறையே ரூ.1000 மற்றும் ரூ.1,500 என உயர்த்திக் கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    சாமானியனை நசுக்குகிறதா தமிழக அரசு?- ஆவின் தயிர் விலை உயர்வு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....