Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஅறிவியல்பன்றி இதயம் பொருத்தப்பட்ட முதல் நபர் திடீர் மரணம் !

    பன்றி இதயம் பொருத்தப்பட்ட முதல் நபர் திடீர் மரணம் !

    அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பென்னட் என்ற பன்றி இதயம் பொருத்தப்பட்ட நபர், இதயம் பொருத்தப்பட்டு இரண்டு மாதங்கள் ஆன நிலையில் மரணமடைந்தார்.

    அமெரிக்காவைச் சேர்ந்தவர் டேவிட் பென்னட், 57 வயது  இதய நோயாளியான இவர் இதயநோய் காரணமாக மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாற்று இதயம் பொருத்த வேண்டிய சூழ்நிலையில் இருந்த அவரது உடல், புது இதயத்தையும் ஏற்க முடியாத நிலையில் இருந்தது. இதனால், மருத்துவர்கள் பன்றி இதயத்தைப் பொருத்துவது குறித்து அவரது குடும்பத்தினரிடம் ஆலோசனை தெரிவித்திருந்தனர். 

    David Bennett

    வேறுவழியே இல்லாத நிலையில் அவரது குடும்பத்தாரும் இதற்கு ஒப்பு கொண்டனர். இதன்படி கடந்த ஜனவரி 7ஆம் தேதி அறுவைசிகிச்சை செய்து பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது. அறுவைசிகிச்சை வரலாற்றில் ஒரு புது முயற்சியாக இதை செய்த மருத்துவர்கள் அவரை தீவிர மருத்துவ பிரிவில் வைத்து பேணிக்காத்து வந்தனர். சிறு சிறு உடல்நல கோளாறுகளுடன் இயங்கிக்  கொண்டிருந்த அவரது உடல் சில நாட்களுக்கு முன்பு மிகவும் மோசமாகி கடந்த மார்ச் 8ஆம் தேதி உயிர் பிரிந்தது.

    உடல்நிலை மோசமானதற்க்கு இதுதான் காரணம் எனக்கூற  முடியாத மருத்துவர்கள், அவருக்கு தங்களிடம் இருந்த முழு மருத்துவக்கண்காணிப்பும் வழங்கப்பட்டது  என தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து பேசிய அவரது மகன் பென்னட் ஜூனியர் நாங்கள் புதுமையான முயற்சிகள் ,எதிர்பாரா கனவுகள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க பல தூக்கமில்லா இரவுகளின் முயற்சிகளுக்கு தலைவணங்குகிறோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் புதிய முயற்சி பலரின் நம்பிக்கைக்கு ஊன்றுகோலாக இருக்கட்டும் என மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவமனை ஊடகங்களுக்கு  வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யும் போதே தான் பிழைப்பேன் என்ற நம்பிக்கை இல்லை என்றும், ஆனால் அவரது நம்பிக்கையற்ற தன்மையையும் மீறி மருத்துவர்களின் முயற்சி இரண்டு மாதங்கள் அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....