Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபுல்டோசரில் அவசர அவசரமாக மருத்துவமனை வந்த நபர்.. ஆம்புலன்ஸ் வராததால் ஏற்பட்ட அவலம்

    புல்டோசரில் அவசர அவசரமாக மருத்துவமனை வந்த நபர்.. ஆம்புலன்ஸ் வராததால் ஏற்பட்ட அவலம்

    மத்திய பிரதேசத்தில் விபத்தில் காயமடைந்த நபரை புல்டோஸரைப் பயன்படுத்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    மத்திய பிரதேச மாநிலத்தில் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் மகேஷ் பர்மன் என்ற நபர் பலத்த காயமடைந்தார். அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதனால், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

    இதன்காரணமாக அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர கால தாமதம் ஆனதால், அங்கிருந்த புஷ்பேந்திர விஸ்வகர்மா என்ற நபர் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து விட்டு, பிறகு அவரை புல்டோஸரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். 

    தகவல் தெரிவித்தும், அரை மணி நேரத்துக்கு மேலாகியும், ஆம்புலன்ஸ் வராதா காரணத்தினால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

    இந்நிலையில், அடிப்பட்ட அவரை புல்டோஸரில் ஏற்றிச் செல்லும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....