Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநாகர்கோவிலில் கிளிகள் வளர்ப்பு; அபராதம் விதித்த வனத்துறை!

    நாகர்கோவிலில் கிளிகள் வளர்ப்பு; அபராதம் விதித்த வனத்துறை!

    நாகர்கோவிலில் கிளிகளை சட்டவிரோதமாக வீட்டில் வளர்த்தமைக்காக மெய்யல் என்பவருக்கு வனத்துறை சார்பில் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வசிப்பிடங்களில் இருந்து அதிகளவில் கிளி மீட்க்ப்பட்டு வருகிறது. வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972-ன் படி வீட்டில் காட்டு விலங்குகள், பறவைகள் வளர்ப்பது குற்றமாகும். வீட்டில் வளர்க்க தடை செய்யப்பட்ட பட்டியலில் பச்சைக்கிளியும் உள்ளது. 

    ஆனால், இது பலருக்கு தெரிவதில்லை. இதனால் பலர் தங்கள் வீடுகளில் கிளிகளை வளர்க்கின்றனர். இதையறியும் வனத்துறையினர் வீடுகளில் இருந்து கிளியை மீட்டும், கிளி வளர்த்தோருக்கு அபராதம் விதித்தும் வருகின்றனர். 

    அந்த வகையில், நாகர்கோவிலிலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன்படி, நாகர்கோவில் அடுத்த மேலப்புத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் மெய்யல்(58). இவர் தன் வீட்டில் சட்ட விரோதமாக பச்சைக் கிளிகளை வளர்த்து வருவதாக மாவட்ட வன அலுவலர் இளையராஜாவுக்குத் தகவல் கிடைத்தது. 

    இந்தத் தகவலை அடுத்து, பூதப்பாண்டி வனச்சரகர் தலைமையிலான குழுவினர் மெய்யல் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது. இரு பச்சைக்கிளிகள் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வனத்துறையினர், மெய்யலுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், இரு பச்சைக் கிளிகளையும் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறுகையில், “வீட்டில் காட்டு விலங்குகள், பறவைகளை வளர்ப்பது குற்றம். அப்படி யாரும் வளர்த்தால் மாவட்ட வன அலுவலகத்தில் வந்து ஒப்படைக்க வேண்டும்” என்று கூறினார். 

    முன்னதாக சில தினங்களுக்கு முன்பு வீட்டில் பச்சைக்கிளி வளர்த்த நடிகர் ரோபோ சங்கருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    பொன்னியின் செல்வன் சொன்ன தேதியில் ரிலிஸாகுமா? – படக்குழு பதில்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....