Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'நாட்டு நாட்டு' பாடலுக்கு பாகிஸ்தான் நடிகை நடனம் ஆடி அசத்தல்! வைரல் வீடியோ

    ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு பாகிஸ்தான் நடிகை நடனம் ஆடி அசத்தல்! வைரல் வீடியோ

    திருமண நிகழ்ச்சியில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு பாகிஸ்தான் நடிகை நடனம் ஆடி அசத்தியுள்ளார். 

    பாகுபலி திரைப்படத்துக்கு பிறகு, இந்திய அளவில் முக்கிய இயக்குநராக வலம் வரும் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஆர்ஆர்ஆர் திரைப்படம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

    மேலும், இப்படமானது உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இத்திரைப்படத்திற்கு, கீரவானி இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் மிகவும் பிரபலமான ‘நாட்டு நாட்டு’ பாடல் அமெரிக்காவில் நடைபெற்ற கோல்டன் குளோப் விருதில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை வென்றது. 

    இதைத்தொடர்ந்து, தற்போது ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், இந்தப் பாடலுக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் இப்பாடலுக்கு நடனம் ஆடி காணொளிகளை வெளியிட்டு வருகின்றனர். 

    அந்த வகையில், பிரபல பாகிஸ்தான் நடிகை ஹனா அமீர் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடும் காணொளி தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. திரைப்படங்களிலும் சின்னத்திரையிலும் நடித்து பிரபலமான இவர், சமீபத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடியுள்ளார்.

    மதவெறி, வெறுப்புணர்வு சூழ்நிலைக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்- ராகுல்காந்தி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....