Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபாராகிளைடிங் செய்த சுற்றுலாப் பயணிகள்; மின்கம்பத்தில் சிக்கி தவிப்பு...

    பாராகிளைடிங் செய்த சுற்றுலாப் பயணிகள்; மின்கம்பத்தில் சிக்கி தவிப்பு…

    கேரளாவில் பாராகிளைடிங் செய்த சுற்றுலாப்பயணிகள் இரண்டு பேர் மின்கம்பத்தில் சிக்கிக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    கேரள மாநிலம், திருவனந்தபுரம் வர்கலாவில் இருக்கும் பாபநாசம் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் இருவர் பாராகிளைடிங் செய்ய  திட்டமிட்டிருந்தனர். 

    அதன்படி அவர்கள் சாகசத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர்களுடைய பாராசூட் மின்கம்பத்தில் சிக்கியது. இதன் காரணமாக, அவர்கள் நினைத்த இடத்தில் இறங்க முடியாத சூழல் உருவானது. அதோடு அவர்கள் மின்கம்பத்தில் தொங்கியபடி சிக்கி தவித்தனர். 

    மின்கம்பம் 50 அடி உயரம் கொண்டதாக இருந்த நிலையில் அதிலிருந்து விழாமல் இருக்க அவர்கள் முயன்றுக்கொண்டு இருந்தனர். சுமார் 2 மணி நேரமாக தொங்கிய நிலையில் அவர்கள் தவித்து வந்தனர். இத்தகவல் அறிந்து சென்ற காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் அவர்கள் இருவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.   

    பாராகிளைடிங் மூலம் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாட்டின் வெவ்வேறு இடங்களில் பாராகிளைடிங் செய்த இருவர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதிமுக, பாஜக இடையே மோதல் இல்லை- ஜெயக்குமார் பேச்சு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....