Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அதிமுக, பாஜக இடையே மோதல் இல்லை- ஜெயக்குமார் பேச்சு..

    அதிமுக, பாஜக இடையே மோதல் இல்லை- ஜெயக்குமார் பேச்சு..

    அதிமுக-பாஜக இடையே எந்த மோதலும் இல்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

    அதிமுக வட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவுபெற்ற பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதித்ததாக தெரிவித்தார். 

    மேலும் பொதுச் செயலாளர் தேர்வு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, பொதுச் செயலாளர் தேர்வு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை எனவும், பொதுச் செயலாளர் தேர்வு நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும் எனவும் தெரிவித்தார். 

    தொடர்ந்து அதிமுக, பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பட்டதற்கு, அதிமுக-பாஜக கூட்டத்து தொடர்வதாகவும், இருகட்சி இடையே மோதல் குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்த ஜெயக்குமார், என்ன மோதல் உள்ளது? மோதல் இல்லை. ஐடி விங்கை சேர்ந்தவர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி; தமிழக அளவில் அதிமுக தலைமையில் கூட்டணி என தெரிவித்தார். 

    அண்ணாமலை தனது தாயார் ஜெயலலிதாவை விட 100 மடங்கு பவர்புல் எனவும், தனது மனைவி ஜெயலலிதாவை விட 1000 மடங்கு பவர்புல் என அண்ணாமலை கூறியது குறித்து ஜெயக்குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், அண்ணாமலை தலைவர்கள் பற்றி கூறுவது அவருடைய தனிப்பட்ட கருத்து எனவும், தங்களுடைய தலைவருக்கு நிகரானவர் இனி தமிழகத்தில் பிறக்கப்போவது இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 

    மேலும் ஓபிஎஸ் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஓபிஎஸ் நடத்துவது கட்சி இல்லை எனவும், அவர் கடை நடத்தி வருவதாகவும் 99 சதவீத நிர்வாகிகள் இபிஎஸ் தலைமையில் தான் இருப்பதாகவும், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தவிர அனைவரும் தங்களின் சகோதரர்கள் தான் என ஜெயக்குமார் தெரிவித்தார். 

    ‘கேப்டனுக்கு பாராட்டு விழா’ – நடிகர் விஷால் பேச்சு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....