Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டு''பாகிஸ்தான் அணியின் ஜெர்சி தர்பூசணி பழம் மாதிரி இருக்கு'' பாக். முன்னாள் வீரர் கனேரியா...

    ”பாகிஸ்தான் அணியின் ஜெர்சி தர்பூசணி பழம் மாதிரி இருக்கு” பாக். முன்னாள் வீரர் கனேரியா கிண்டல்

    பாகிஸ்தான் அணியின் ஜெர்சியைப் பார்க்கும்போது பழக்கடையில் நிற்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது என முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து தெரிவித்துள்ளனர். 

    இந்த ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதற்காக கிரிக்கெட் அணிகள் தயாராகி வருகின்றன. 

    மேலும், இருபது ஓவர் உலக கோப்பையில் விளையாட உள்ள அணிகள் தங்களின் புதிய சீருடையை (ஜெர்சியை) அறிமுகம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் அணியும் தங்களின் புதிய  சீருடையை அறிமுகப்படுத்தியுள்ளது. 

    இந்த புதிய சீருடை குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் சீருடையைப் பார்க்கும்போது பழக்கடையில் நிற்பதைப் போன்ற உணர்வு ஏற்படுவதாகவும், தர்பூசணி பழம்போல் உள்ளதாகவும் வழக்கமான அடர் பச்சை வண்ணத்தில் சீருடையை வடிவமைத்து இருக்க வேண்டும் என்றும் அந்நாட்டு முன்னாள் வீரரான கனேரியா கருத்து தெரிவித்து உள்ளார். இவரின் இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: ஆசிய கோப்பை தொடர்; அறிவிக்கப்பட்ட இந்திய அணி…உற்சாகத்தில் ரசிகர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....