Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள காகித பஞ்சம்!! அடுத்த இலங்கையாக மாறிவருகிறதா??

    பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள காகித பஞ்சம்!! அடுத்த இலங்கையாக மாறிவருகிறதா??

    உலக அளவில் நிலவிவரும் பொருளாதாரச் சரிவு காரணமாக பல நாடுகளும் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றன. ஏற்கனவே பொருளாதாரத்தில் பின்னடைந்துள்ள நாடுகளில் பஞ்சமானது தலைவிரித்தாடுகிறது.

    உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இந்த பொருளாதாரச்சரிவிலிருந்து தங்களது மக்களை காப்பதற்கு போராடிவரும் நிலையில், தவறான பொருளாதாரக் கொள்கையினால் பல நாடுகள் அழிவினை நோக்கிச் சென்றுள்ளன. இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் பெரும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த வரிசையில் தற்போது இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானும் பொருளாதாரச் சரிவினை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

    உலகளாவிய பணவீக்கமும், பாகிஸ்தான் நாட்டின் தவறான பொருளாதாரக் கொள்கையும் தற்போது அந்த நாட்டினை பெரும் சரிவினை நோக்கிக் கூட்டிச் சென்று கொண்டிருக்கிறது. 

    இதில் ஒருபடியாக, தற்போது அந்நாட்டில் பெரும் காகிதத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கு புத்தகங்களை விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நாடு காகித உற்பத்தி அமைப்பானது தெரிவித்துள்ளது.

    ‘காகிதத்தின் விலையானது உயர்ந்து கொண்டே வருவதால் புத்தகங்களுக்கு விலை நிர்ணயிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானின் சிந்து, பஞ்சாப், கைபர் பகுதியில் இருக்கும் பாடப்புத்தக அமைப்பானது புத்தகங்களை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.’ என அந்நாட்டு உள்ளூர் செய்தி நிறுவனமானது தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தானின் கட்டுரையாளர் அயாஸ் அமீர், ‘பாகிஸ்தான் நாடானது இதற்கு முன் வாங்கிய கடன்களை அடைப்பதற்காக மீண்டும் கடன் வாங்கியுள்ளது. இங்கு ஆட்சி செய்த அனைத்து அதிகாரிகளும் செய்தது ஒன்றுதான்; பிரச்சனைகளுக்கு கடன் வாங்குவது, பிறகு வாங்கிய கடனை அடைக்க மறுபடி கடன் வாங்குவது.’ என்று தனது கட்டுரையில் காட்டமாகக் எழுதியுள்ளார்.

    மேலும், ‘எந்த நாடுகளும் கடன் கொடுக்க முன்வராத நிலைக்கு பாகிஸ்தானானது தள்ளப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ஜியா உல் ஹக் இருந்த பொழுது பாகிஸ்தானின் மக்கள்தொகை 11 கோடியாக இருந்தது. இது தற்போது 24 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் நமது ஆட்சியாளர்கள் பாகிஸ்தானின் பொருளாதாரத்தினை உயர்த்த என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.’ என்றும் எழுதியுள்ளார்.

    பாகிஸ்தானின் இந்த நிலைமையினை தனக்கு ஆதாயமாகப் பயன்படுத்திக்கொள்ள சீனா விரும்பியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் சீனாவானது பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்க மதிப்பில் சுமார் 2.3 பில்லியன் டாலர் கடனாகக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    2019-20ம் நிதியாண்டில் பாகிஸ்தான் சுமார் 120 மில்லியன் டாலரினை சீனாவிடம் வாங்கிய மூன்று பில்லியன் டாலர் கடனுக்காக வழங்கியது. 2021-22ம் நிதியாண்டில், 150 மில்லியன் டாலரினை சீனாவிற்கு வட்டியாக பாகிஸ்தான் வழங்கியுள்ளது. 

    எல்லாம் முடிஞ்சிருச்சு! – எலான் மஸ்க்கிற்கு ட்விட்டர் நிறுவனம் அனுமதி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....