Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்தீவிரவாத அச்சுறுத்தல்; பரபரப்பில் பாகிஸ்தான்!

    தீவிரவாத அச்சுறுத்தல்; பரபரப்பில் பாகிஸ்தான்!

    பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

    பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சட்டம்-ஒழுங்கு நிலையை பராமரிக்க அதிக கவனத்துடன் இருக்குமாறு இஸ்லாமாபாத்தின் ஆய்வாளர் அஃபர் நசீர் சில கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். 

    அவர் பிறப்பித்திருக்கும் உத்தரவில், இஸ்லாமாபாத்தில் அனைத்து முக்கிய அதிகாரிகளும் அந்தந்த பகுதிகளில் இருக்க வேண்டும் எனவும் பணியில் இருக்கும் அதிகாரிகள் முழு பாதுகாப்பு உபகரணங்களுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

    மேலும் அஃபர் நசீர், அரசு மற்றும் தனியார் வாகனங்கள், அவசர ஊர்திகள், சந்தேகத்திற்கிடமான நபர்களை கூர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

    சிவப்பு மண்டலங்கள் மற்றும் தூதரக பகுதிகளின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். நம்பர் பிளேட் மற்றும் டிண்ட் கண்ணாடிகளை கொண்ட வாகனங்கள் நுழைவதைத் தடை செய்ய வேண்டும். விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அஃபர் நசீர் தெரிவித்தார். 

    பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்கு மத்தியில் தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு இஸ்லாமாபாத்திற்கு மீண்டும் அச்சுறுத்தலாக உரு மாறியுள்ளது. 

    உதவி ஆய்வாளரை தாக்கிய ரவுடி; சுட்டுப்பிடித்த பெண் காவல் உதவி ஆய்வாளர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....