Thursday, March 21, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்புதுமணத் தம்பதிகளுக்கு  சம்பளத்துடன் ஒரு மாதம் விடுமுறை - பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புது முடிவு!

    புதுமணத் தம்பதிகளுக்கு  சம்பளத்துடன் ஒரு மாதம் விடுமுறை – பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புது முடிவு!

    மக்கள்தொகையை அதிகரிக்கும் நோக்கில் சீன அரசு, புதுமணத் தம்பதிகளுக்கு  சம்பளத்துடன் ஒரு மாதம் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளது. 

    சீனாவில் மக்கள் தொகை பெருக்க சதவீதம் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி உலக மக்கள் தொகையில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. ஆனால், இன்னும் சில ஆண்டுகளில் சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளன. 

    இதனால், சீனா மக்கள் தொகையை பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குழந்தை பிறப்பை அதிகரிக்க சீன அரசு பல்வேறு சலுகைகளையும் அறிவித்து வருகிறது. 

    இந்நிலையில், புதுமணத் தம்பதிகளுக்கு சம்பளத்துடன் ஒரு மாதம் விடுமுறை அளித்து உத்தரவிட்டிருக்கிறது. முன்னதாக,  கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 1000 தம்பதிகளில் வெறும் 6.77 சதவீதம் பேருக்கு மட்டுமே குழந்தை பிறப்பதாக தெரிய வந்தது. 

    இதையடுத்தே, திருமணத்தை ஊக்குவிக்கவும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும் சீனா அரசு முடிவு செய்து இருக்கிறது. அதன்படி திருமணம் முடிந்த திருமண தம்பதிகளின் விடுமுறையை ஒரு மாதமாக அதிகரிப்பதோடு சம்பளமும் வழங்கப்படும் என்று அந்த நாட்டில் உள்ள கான்சூ, ஷாங்ஸி மாகாண அரசுகள் அறிவித்துள்ளன. 

    சீனாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனால் சீனாவில் மக்கள் தொகை கணிசமாக குறைந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. 

    ‘உத்தராகாண்டில் எந்நேரத்திலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்படலாம்’ – விஞ்ஞானி எச்சரிக்கை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....