Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஉதவி ஆய்வாளரை தாக்கிய ரவுடி; சுட்டுப்பிடித்த பெண் காவல் உதவி ஆய்வாளர்!

    உதவி ஆய்வாளரை தாக்கிய ரவுடி; சுட்டுப்பிடித்த பெண் காவல் உதவி ஆய்வாளர்!

    அயனாவரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளரை தாக்கிய ரவுடியை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். 

    சென்னை, அயனாவரம் பகுதியில் கடந்த 20 ஆம் தேதி அதிகாலை அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் என்பவர் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் உதவி ஆய்வாளரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது. 

    இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக அயனாவரம் காவல்துறையினர் கொலை முயற்சி உள்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

    சம்பவத்தின்போது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் கெளதம் என்பதும் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்தவர் சூர்யா என்கிற பெண்டு சூர்யா என்றும், அவரின் பின்னால் அமர்ந்து இருந்தவர் அஜித் என்பதும் தெரியவந்தது. 

    இதைத்தொடர்ந்து அயனாவரம் பெண் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் தலைமை காவலர் அமானுதீன், காவலர்கள் சரவணன், திருநாவுக்கரசு ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்ட கெளதம் மற்றும் அஜித் ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர். மேலும் உதவி ஆய்வாளர் சங்கரை தாக்கிய பெண்டு சூர்யாவை பிடிப்பதற்காக  தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

    பெண்டு சூர்யா திருவள்ளூர் மாவட்டத்தில் தனது அக்கா வீட்டில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படையினர், அவரை கைது செய்து அயனாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். 

    அப்போது சிறுநீர் கழிக்க வேண்டுமென பெண்டு சூர்யா கேட்டத்தை அடுத்து நியூ ஆவடி சாலையில் இருக்கும் ஆர்டிஓ அலுவலகம் அருகே வாகனத்தை நிறுத்தினர். அந்த சமயம் பார்த்து பெண்டு சூர்யா அங்கிருந்து தப்பி ஓட, அவரை துரத்திக்கொண்டே காவலர்களும் ஓட, பாதுகாப்பு கருதி உதவி ஆய்வாளர் மீனா தான் வைத்திருந்த துப்பகையால் பெண்டு சூர்யாவின் முழங்கால் பகுதியில் சுட்டுப்பிடித்தார். 

    பிடிபட்ட பெண்டு சூர்யா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இரு காவலர்களும் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெண்டு சூர்யா மீது 14 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. 

    சென்னையில் அனுமதியின்றி மெழுகுவர்த்தி பேரணி; அண்ணாமலை உள்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....