Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபாகிஸ்தானில் இருந்து மீண்டும் மீண்டும் இந்தியாவுக்கு பறக்கும் ட்ரோன்கள்..

    பாகிஸ்தானில் இருந்து மீண்டும் மீண்டும் இந்தியாவுக்கு பறக்கும் ட்ரோன்கள்..

    இந்திய எல்லை பகுதியில் பாகிஸ்தானின் ட்ரோன் பறந்து வந்ததால், அதனை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

    பாகிஸ்தானின் ட்ரோன்கள் இந்திய எல்லை பகுதிகளில் பறந்து வருகின்றன. அப்படி பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லை பகுதிகளுக்குள் வரும் ட்ரோன்களை அவ்வப்போது இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தி வருகின்றனர். 

    இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் குருதாஸ் பூரை ஒட்டிய இந்திய எல்லை பகுதிக்குள் பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் ஒன்று வந்ததாக சொல்லப்படுகிறது. இதனை கவனித்த எல்லை பாதுகாப்பு படையினர், அதை சுட்டனர். இருப்பினும் அந்த ட்ரோன் பாகிஸ்தான் எல்லைக்குள் மறைந்ததாக தெரிகிறது. 

    அந்த ட்ரோன், பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்து இருக்கலாம் என பஞ்சாப் எல்லை படையைச் சேர்ந்த அஸிப்ஜலால் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அந்த ட்ரோனை கண்டுபிடிக்கும் பணிகள் எல்லை பாதுகாப்பு படை சார்பில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

    அதே சமயம், கடந்த 3 நாட்களில் மட்டும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்திய எல்லை பகுதிக்குள் 4-வது ட்ரோன் வந்ததாக எல்லை பாதுகாப்பு படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 22 ட்ரோன்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    திடீரென சமூகவலைதள கணக்குகள் முடக்கம்; பல்லாயிரம் பேர் பாதிப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....