Sunday, March 17, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்திடீரென சமூகவலைதள கணக்குகள் முடக்கம்; பல்லாயிரம் பேர் பாதிப்பு!

    திடீரென சமூகவலைதள கணக்குகள் முடக்கம்; பல்லாயிரம் பேர் பாதிப்பு!

    உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான பயனர்களின் ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் திடீரென முடக்கப்பட்டன. 

    ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பிரபல சமூக ஊடகங்களை  உலக முழுவதிலும் பல கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

    இந்நிலையில் ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்கள் உலக அளவில் பல ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு முடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு சமூக வலைதள கணக்குகள் அதிக அளவில் முடக்கப்பட்டு உள்ளன. 

    பல பயனர்கள் தங்களால் ட்விட்டரில் ட்விட் செய்ய முடியவில்லை எனவும், ‘ட்வீட் செய்வதற்கான தினசரி வரம்பைத் தாண்டிவிட்டீர்கள்’ என பிழைச் செய்தியே வருவதாகவும் தெரிவிக்கின்றனர். 

    ட்விட்டர் குழுவினர், இந்தச் சிக்கலைப் பற்றி அறிந்திருப்பதாகவும், அதைச் சரிசெய்வதற்கான முயற்சியில் இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் சிலருக்கு ட்விட்டர் எதிர்ப்பார்த்தபடி செயல்படாமல் இருக்கலாம் என்றும், சிக்கலுக்கு மன்னிப்பு வேண்டியும்  இதை சரிசெய்வதற்கு விழிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    அதே சமயம் ஃபேஸ்புக் பயனர்களின் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகளும் இன்ஸ்டாகிராம் பயனர்களின் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகளும் முடக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. 

    அஜித்குமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு எப்போது? – வெளிவந்த அறிவிப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....