Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; ஓபிஎஸ் அணி தரப்பு வேட்பாளர் அறிவிப்பு

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; ஓபிஎஸ் அணி தரப்பு வேட்பாளர் அறிவிப்பு

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பாக செந்தில் முருகன் வேட்பாராளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான திருமகன் ஈ.வெ.ரா கடந்த 4 ஆம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தத் தொகுதி காலியானதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 18 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

    அதன்படி, நேற்று ஜனவரி 31 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் திருமகன் ஈ.வெ.ரா தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

    அதே சமயம் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் எஸ் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பினை அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி தரப்பில் இருந்து செந்தில் முருகன் தான் வேட்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    மேலும் அதிமுக இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், பாஜகவின் நிலைப்பாடும் தற்போது குழப்பமான சூழ்நிலையிலேயே இருந்து வருகிறது. 

    இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை அறிவித்தால் தங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவோம் என ஓபிஎஸ் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    தீவிர வலைப்பயிற்சியில் தோனி; வைரலாகும் சிக்சர் வீடியோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....