Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு300 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோயில்; 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா

    300 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோயில்; 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா

    16 ஆண்டுகளுக்கு பிறகு, திண்டுக்கல் வடமதுரையில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. 

    திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க சவுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு கடந்த 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

    மேலும், கோயில் ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா நடைபெறும். கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாலாலய பூஜைகளுடன் குடமுழுக்கு திருப்பணிகள் தொடங்கப்பட்டன. அதன்படி திருப்பணிகளும் முடிக்கப்பட்டன. 

    இந்நிலையில், இன்று காலை மேளதாளங்கள் முழங்க புனித தீர்த்தங்கள் கோபுர கலசங்களுக்கு கொண்டுவரப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க 16 ஆண்டுகள் பிறகு இன்று குடமுழுக்கு நடைபெற்றது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு குடமுழுக்கு விழாவை நேரில் கண்டனர். 

    மதத்தின் பெயரால் பயங்கரவாதம் – வேதனை தெரிவத்த பாகிஸ்தான்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....