Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வெளியானது, தளபதி 67 படத்தின் ஸ்பெஷல் வீடியோ!

    வெளியானது, தளபதி 67 படத்தின் ஸ்பெஷல் வீடியோ!

    நடிகர் விஜய்யின் ‘தளபதி 67’ படத்தின் பூஜை வீடியோ தற்போது படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. 

    நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 67’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

    கடந்த இரு நாட்களாக ‘தளபதி 67’ படத்தின் அப்டேட்டுகள் வெளிவந்து ரசிகர்களையும், சினிமா துறையினரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில், நேற்று இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதன்படி, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், சாண்டி, மேத்யூ தாமஸ் மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடிக்க உள்ளனர். 

    இவர்களைத் தொடர்ந்து, ‘தளபதி 67’ படத்தில் நடிகை த்ரிஷா நடிக்க உள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 14 வருடங்களுக்குப் பிறகு நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா இணைந்து நடிக்க உள்ளனர். இதைத்தொடர்ந்து, ‘தளபதி 67’ படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. 

    இந்நிலையில், ‘தளபதி 67’ படத்திற்காக போடப்பட்ட பூஜை வீடியோ தற்போது படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

    முன்னதாக, இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ‘பணத்தை எடுக்க வரவில்லை… நான் உங்கள் விருந்தாளி’ – கடிதம் எழுதிய திருடன்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....