Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுதீவிர வலைப்பயிற்சியில் தோனி; வைரலாகும் சிக்சர் வீடியோ!

    தீவிர வலைப்பயிற்சியில் தோனி; வைரலாகும் சிக்சர் வீடியோ!

    முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டனும் தற்போதைய சென்னை அணியின் கேப்டனுமான மஹேந்திர சிங் தோனி வலைப்பயிற்சி செய்யும் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 

    16-வது ஐபிஎல் தொடர் வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இந்தத் தொடர் பொதுவாக மே மாதம் வரை நடைபெறுவது வழக்கம். இருப்பினும் இந்த ஆண்டுக்கான தொடரின் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

    இந்நிலையில், இதுவரை சிஎஸ்கே அணி 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. மேலும் 5-வது கோப்பையை வெல்லும் முனைப்பிலும் இருந்து வருகிறது. அதேபோல் அதிகமுறை இறுதிப்போட்டிக்கும், அரையிறுதிக்கு சென்ற அணி என்ற சாதனையை தன்னிடம் வைத்து உள்ளது. இதற்கு காரணம் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி. 

    சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி கடந்த 2020 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். இவர் தனது கடைசி ஐபிஎல் போட்டியை சென்னையில் தான் விளையாட இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடப்பதால், 5-வது முறையாக சிஎஸ்கே அணிக்காக கோப்பையை வென்று தந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், 16-வது ஐபிஎல் தொடருக்கான வலைப்பயிற்சியை அனைத்து வீரர்களுக்கும் முன்பாகவே தொடங்கி இருக்கிறார் தோனி. அப்படி வலைப்பயிற்சியில் இவர் சிக்ஸர்கள் அடிக்கும் காணொளி தற்போது வைரலாக பரவி வருகிறது. 

    தோளில் துணிப்பையுடன் தமிழகத்தின் தலைமைச் செயலாளர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....