Saturday, May 4, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்இந்திய ஓப்போ நிறுவனம் ரூ.4,389 கோடி வரி ஏய்ப்பு

    இந்திய ஓப்போ நிறுவனம் ரூ.4,389 கோடி வரி ஏய்ப்பு

    இந்தியாவில் செயல்பட்டு வரும் ஓப்போ நிறுவனம் ரூ.4,389 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக டிஆர்ஐ தகவல் தெரிவித்துள்ளது.

    சீனாவில் இயங்கும் குவாங்டாங் ஓப்போ தொலைத்தொடர்பு சாதன நிறுவனத்தை தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் ஓப்போ கைப்பேசி நிறுவனம் இயங்கி வருகிறது. 

    இந்தியா முழுவதும் உற்பத்தி, வடிவமைத்தல், மொத்த வியாபாரம், கைபேசி மற்றும் உதிரி பாகங்கள் விநியோகம் உள்ளிட்டவற்றில் ஓப்போ இந்தியா ஈடுபட்டு வருகிறது. இந்திய ஓப்போ நிறுவனம்  ஒன் பிளஸ், ரியல்மி  உள்ளிட்ட பல்வேறு கைபேசி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

    இந்தியாவில் உள்ள ஓப்போ அலுவலகம் உள்பட ஓப்போ நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் வீட்டில் வருவாய் புலனாய்வுத்துறை சோதனை நடத்தியது. அப்போது கைபேசி உற்பத்தியை செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின் விலையை ஓப்போ இந்தியா நிறுவனம் தவறாக குறிப்பிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த விசாரணையில், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) சுமார் ரூ.4,389 கோடி வரி ஏய்ப்பு செய்ததைக் கண்டறிந்துள்ளது. இதனையடுத்து இந்திய ஓப்போ நிறுவனத்துக்கு வரி ஏய்ப்பு தொடர்பான விளக்கத்தை அளிக்குமாறு டிஆர்ஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

    சமீபத்தில், சீன நிறுவனமான விவோ வரி செலுத்துவதை தவிர்க்க ரூ.62,476 கோடியை சட்டவிரோதமாக சீனாவுக்கு பரிவர்த்தனை செய்துள்ளது என விவோ நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியது. இதை எதிர்த்து விவோ நிறுவனம் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

    அந்த மனுவில், “வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் சரக்கு வரி, சுங்க வரி போன்ற வரிகளை விவோ நிறுவனத்தால் செலுத்த இயலவில்லை. மேலும், தொழிலாளர்களுக்கான ஊதியம், நிறுவனத்துக்கான செலவுகள் ஆகியவற்றை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது விவோவின் வணிகத்தை, நிரந்தர முடிவுக்குக் கொண்டு செல்லும் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆக்ரோஷத்துடன் காணப்படும் இந்திய தேசிய சின்னம்: எதிர்க்கட்சிகள் விமர்சனம்

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....