Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஎம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு - மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவிப்பு

    எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு – மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவிப்பு

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு விரைவில் தொடங்கும் என மருத்துவ கல்வியை இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது.

    இந்தக் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான அறிவிப்பை மருத்துவக் கல்வி இயக்குநரகம் இதுவரை வெளியிடவில்லை.

    இதனிடையே அறிவிப்புக்கான தாமதம் குறித்து மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளதாவது:

    நீட் தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ச்சி பெற்ற 66 ஆயிரம் மாணவர்களின் முழு விபரங்களையும், தேசிய தேர்வு மையம் இதுவரை தராத காரணத்தால், கலந்தாய்வுக்கான பணிகள் தாமதமாகி வருகிறது. 

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவை ஓரிரு நாட்களில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வருகிறது. அரசின் அனுமதியைப் பெற்று விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.

    மேலும், கலந்தாய்வு ஆன்லைனில் நடத்துவதற்கும் நேரடியாக நடத்துவதற்கும் தயாராக இருக்கிறோம். அரசு எப்படி நடத்த வேண்டும் என்று உத்தரவிடுகிறதோ அந்த முறையில் கலந்தாய்வு நடத்தப்படும்.

    இவ்வாறு கல்வி இயக்குனராக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    தொடர்ந்து 61 முறை வெற்றி! 106 வயதிலும் சாதனை படைத்த ரயில்வே ஊழியர் கண்ணையா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....