Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமந்தி பிரியாணியால் நேர்ந்த சோகம்; 429 உணவகங்களில் சோதனை

    மந்தி பிரியாணியால் நேர்ந்த சோகம்; 429 உணவகங்களில் சோதனை

    கேரளாவில் மந்தி பிரியாணி சாப்பிட்ட பெண் செவிலியர் உயிரிழந்ததால் 429 உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

    கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் ரேஷ்மி என்ற அரசு பெண் செவிலியர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோட்டயத்தில் உள்ள ஒரு உணவகத்தில் அல்பாமா சிக்கனையும் மற்றும் மந்தி பிரியாணியும் சாப்பிட்டார். 

    இதன் காரணமாக சில மணி நேரத்தில் அவருக்கு வாந்தி, வயிற்றுபோக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் ரேஷ்மி உயிரிழந்தார். 

    இதன் காரணமாக, ரேஷ்மி பிரியாணி சாப்பிட்ட அந்தக் கடைக்கு உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி சீல் வைத்தனர்.

    இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கோட்டயத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் சோதனை நடத்த வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டார். இதையடுத்து, மாநிலம் முழுவதிலும் உள்ள 429 உணவகங்களிலும் உணவுப் பாதுகாப்புத் துறையினர் சோதனை செய்ததாகவும் வீணா ஜார்ஜ் கூறினார். 

    43 நிறுவனங்களை மூட உத்தரவிட்டுள்ளதாகவும் 138 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், மேலும் 44 உணவகங்களில் இருந்து உணவு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

    70 சதவீதத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பா? 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....