Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாசாதி மத பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படும் ஓணம் ..கேரள ரயில்கள் 'ஹவுஸ்புல்'

    சாதி மத பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படும் ஓணம் ..கேரள ரயில்கள் ‘ஹவுஸ்புல்’

    மலையாள மொழி பேசிடும் மக்களால் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தில் மட்டுமல்லாமல்  தென் தமிழகத்திலும் ஓணம் பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் ஓணம் பண்டிகையையொட்டி, கேரளா செல்லும் ரயில்கள் ‘ஹவுஸ்புல்’ ஆகியுள்ளன.

    ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திர திருநாள் அன்று மகாபலி என்ற மன்னர் சக்ரவர்த்தி தன்னுடைய நாட்டையும், நாட்டு மக்களையும் பார்க்க வருவதாக எண்ணி, அவரை வரவேற்கும் விதமாக கேரள மக்களால் 10-நாட்கள் கொண்டாடப்படும் நிகழ்வே ஓணம் பண்டிகை.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களுக்கு வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தற்போது ஓணம் பண்டிகைக்காக ரயில்களில் சொந்த ஊர்களுக்கு செல்லத் தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் வசிக்கும் கேரள மாநிலத்தினர், தயாராகி வருகின்றனர்.

    காரைக்கால் – எர்ணாகுளம் டீ கார்டன் எக்ஸ்பிரஸ், சென்னை – ஆலப்புழா எக்ஸ்பிரஸ், சென்னை – திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட், ஹைதராபாத் – திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ், புதுடில்லி – திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தினசரி ரயில்கள், ஹிம்சாகர், அகல்யநகரி, கன்னியாகுமரி, ஸ்வர்ணயஜெயந்தி, பாட்னா உள்ளிட்ட வாராந்திர ரயில்களில், டிக்கெட் முன்பதிவு நிறைவு பெற்று, காத்திருப்போர் பட்டியல் 100 முதல், 250ஐ கடந்துள்ளது.

    ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘கொரோனா பரவல் காரணமாக, இரு ஆண்டுகளாக, கேரளாவில் கொண்டாட்டங்கள் இல்லாமல் இருந்தன. தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால், ஓணம் பண்டிகை களைகட்டியுள்ளது. பணி நிமித்தமாக வெளியூரில் வசிப்பவர்கள், சொந்த ஊருக்கு வருகின்றனர். அதனால், ரயில்கள் ‘ஹவுஸ் புல்’ ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு ஒரு வாரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் கூறியுள்ளனர் .

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....