Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஓடிசாவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்..

    ஓடிசாவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்..

    ஓடிசா மாநிலத்தில் கஜப்தி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று காலை 9.46 மணிக்கு ஓடிசா மாநிலத்தில் உள்ள கஜப்தி மாவட்டத்தில் 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது புவனேஸ்வரில் இருந்து 277 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. 

    மேலும், இந்த நிலநடுக்கம் பர்லாகேமுண்டி நகரத்திலும் கஜப்தி மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் உணரப்பட்டது. இந்நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

    முன்னதாக, டிசம்பர் 19-ஆம் தேதி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காசி பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவு கோலில் 3.1 ஆகப் பதிவாகியது குறிப்பிடத்தக்கது. 

    தமிழகத்தில் மீதமுள்ள மூன்றரை கோடி பேருக்கு பூஸ்டர் போட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்! மருத்துவர் ராமதாஸ்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....