Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநண்பர்கள் என நம்பிய பெண்; வன்கொடுமை செய்த இளைஞர்கள்

    நண்பர்கள் என நம்பிய பெண்; வன்கொடுமை செய்த இளைஞர்கள்

    கேரளாவில் செவிலியர் மாணவிக்கு மதுகொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இரு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 

    கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த செவிலியர் மாணவி ஒருவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பிறகு அந்த இளைஞரின் நண்பரும் அந்த மாணவியுடன் நெருங்கி பழகி வந்தார்.  இதன்காரணமாக இவர்கள் மூவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். இதனிடையே கடந்த 18 ஆம் தேதி அந்த மாணவியை தனது வீட்டுக்கு வருமாறு அந்த இளைஞர் அழைத்துள்ளார். 

    அந்த இளைஞரின் வீட்டில் அவரது நண்பரும் இருந்துள்ளார். அவரும் மாணவிக்கு தெரிந்தவர் என்பதால், மூவரும் முதலில் சிறிது நேரம் பேச ஆரம்பித்துள்ளனர். பிறகு இளைஞரும் அவரது நண்பரும் மதுகுடித்துள்ளனர். அதே சமயம் மாணவியையும் மதுகுடிக்க வற்புறுத்தியுள்ளனர். நண்பர்கள் சொல்கிறார்கள் என்ற எண்ணத்தில் மாணவியும் மது அருந்தியுள்ளார்.  

    சிறிது நேரத்தில் மாணவிக்கு போதை தலைக்கேறி மயங்கி விழுந்துள்ளார். மாணவி மயங்கி விழுந்ததை பயன்படுத்திக்கொண்ட இளைஞர்கள் அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அன்று இரவு முழுவதும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அவர்கள், மறுநாள் காலையில் எர்ணாகுளம் பேருந்து நிலையத்தில் விட்டு சென்று தப்பிவிட்டனர். 

    இந்தச் சம்பவம் குறித்து தோழி ஒருவரிடம் அழுதபடியே கூறியுள்ளார். மேலும் நேற்று கல்லூரிக்கு சென்ற மாணவி மிகுந்த மனஉளைச்சலுடன் காணப்பட்டார். அப்போது கல்லூரி ஆசிரியைகள், மாணவிக்கு கவுன்சிலிங் கொடுத்துள்ளனர். அப்போது தனக்கு என்ன நடந்தது என்பது குறித்து மாணவி ஆசிரியைகளிடம் தெரிவித்தார். 

    இதையடுத்து, ஆசிரியைகள் காவல்துறையிடம் புகார் கொடுத்தனர். புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்களை தேடினர். பிறகு இளைஞர்களின் செல்போன் எண்களை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

    பைக் டாக்ஸிக்கு தடையா? ரேபிடோ இனி இல்லையா? – வெளிவந்த அதிரடி உத்தரவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....