Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபங்களாவை காலி செய்ய சொல்லி வந்த நோட்டீஸ்..மெஹபூபா செய்யப்போவது என்ன?

    பங்களாவை காலி செய்ய சொல்லி வந்த நோட்டீஸ்..மெஹபூபா செய்யப்போவது என்ன?

    ஸ்ரீநகரில் உள்ள அரசு பங்களாவில் இருந்து காலி செய்யுமாறு முன்னாள் முதல்வருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் குப்ஹார் சாலையில் முதல்வர் மற்றும் வி.வி.ஐ.பி.க்கள் தங்கும் அரசு பங்களா உள்ளது. உயர் பாதுகாப்பு மிகுந்த குப்கர் பகுதியில் முன்னாள் முதல்வர் மெஹபூபா பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்நிலையில் அரசு பங்களாவை ஒரு வாரத்திற்குள் காலி செய்ய வேண்டும் என அவருக்கு ஜம்முகாஷ்மீர் அரசு நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இதுகுறித்து மெஹபூபா தெரிவத்துள்ளதாவது;

    அரசு பங்களாவை காலி செய்ய வேண்டுமென்ற நோட்டீஸ் சில தினங்களுக்கு முன்பு என்னிடம் அளிக்கப்பட்டது. இது எதிர்பார்த்த நடவடிக்கைதான் என்பதால் வியப்பில்லை. நான் தங்கியிருக்கும் அரசு பங்களா, ஜம்மு-காஷ்மீர் முதல்வருக்கானது என்று நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2005, டிசம்பரில் முதல்வர் பதவியிலிருந்து விலகிய பிறகு எனது தந்தைக்கு (முஃப்தி முகமது சயீது) ஒதுக்கப்பட்டதாகும். 

    எனவே, நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள காரணம் சரியானது அல்ல’ என்றார். இந்த நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகுவீர்களா? என்ற கேள்விக்கு, ‘எனக்கென சொந்த இடம் இல்லை . நான் எங்கே தங்க முடியும்? எனது சட்டக் குழுவுடன் ஆலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பேன்.

    இவ்வாறு மெஹபூபா தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: சென்னையிலிருந்து 1.65 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்- போக்குவரத்துத்துறை தகவல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....