Saturday, May 4, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்நான் ஊழியர்தான்.. உங்கள் வேலைக்காரி அல்ல- விமானப் பணிப்பெண்ணின் வாதம்

    நான் ஊழியர்தான்.. உங்கள் வேலைக்காரி அல்ல- விமானப் பணிப்பெண்ணின் வாதம்

    விமானப் பயணி ஒருவர் விமானப் பணிப்பெண்ணிடம், ‘நீங்கள் பயணியின் வேலைக்காரி’ என கூறியதற்கு அந்தப் பெண், ‘நான் பணியாளர்; உங்களின் வேலைக்காரி இல்லை’ என கூறிய காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

    கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் இருந்து தில்லியை நோக்கி இண்டிகோ விமானம் ஒன்று பயணிகளுடன் பயனப்பட்டது. இந்த விமானத்தில் உணவைத்த தேர்ந்தெடுப்பது தொடர்பாக இண்டிகோ பயணி ஒருவருக்கும் விமானப் பணிப்பெண் ஒருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    அந்தக் காணொளியில், விமானப் பயணி, ‘நீங்கள் பயணியின் வேலைக்காரி’ என அந்த விமானப்பணி பெண்ணிடம் கூற அதற்கு இவர், ‘நான் ஒரு பணியாளர்; உங்களின் வேலைக்காரி இல்லை’ என கூறியுள்ளார். 

    மேலும் ‘ஏன் இப்படி கத்துறீங்க, வாய மூடு’ என அந்த விமானப் பயணி விமானப் பணிப்பெண்ணிடம் கூறியுள்ளார். 

    இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக ஒழுங்குமுறை ஆணையம் விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

    இதைத்தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. 

    6 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் கடலுக்குள் மனிதனை அனுப்பும் சமுத்ரயான் திட்டம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....