Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா6 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் கடலுக்குள் மனிதனை அனுப்பும் சமுத்ரயான் திட்டம்!

    6 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் கடலுக்குள் மனிதனை அனுப்பும் சமுத்ரயான் திட்டம்!

    6 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் கடலுக்குள் மனிதனை அனுப்பும் சமுத்ரயான் திட்டம் வருகிற 2026 ஆம் ஆண்டு நிறைவுபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

    ஆழ்கடலுக்குள் இருக்கும் இதுவரை வெளி உலகிற்கு தெரியாதவற்றை வெளியில் கொண்டுவருவதற்காக மனிதர்களுடன் கடலுக்கு அடியில் 6000 மீட்டர் ஆழத்துக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உருவானதே சமுத்ரயான் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் மனிதன் ஆழ்க்கடலுக்கு செல்லும் வகையில் வாகனம் அனுப்பப்பட உள்ளது. 

    மேலும் இந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களை தேர்வு செய்து அவர்களை ஆழ்கடலுக்குள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மூலம் ஆழ்கடலில் என்ன இருக்கிறது என்பதை ஆய்வு செய்வது தான் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். 

    இந்த ஆய்வுக்கான தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் உணர்திறன் தன்மை கொண்ட கருவிகளுடன் மூன்று பேர் ஆழக்கடலில் சுமார் 6000 மீட்டர் ஆழத்தில் ஆய்வு நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தத் திட்டம் 2026 ஆம் ஆண்டு நிறைவுபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

    புகழ்ப்பெற்ற சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....