Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்வடகிழக்கு பருவமழை எதிரொலி: புகார்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு-சென்னை மாநகராட்சி

    வடகிழக்கு பருவமழை எதிரொலி: புகார்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு-சென்னை மாநகராட்சி

    சென்னையில் நேற்று இரவு முதல் வெளுத்து வாங்கும் கனமழையால்,மழை நீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்த எண்ணற்ற புகார்களை தொலைபேசி வாயிலாக பொதுமக்கள் தெரிவிக்க ஏதுவாக சென்னை மாநகராட்சி உதவி எங்களை அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ஆம் தேதி தொடங்கியதை அடுத்து,நேற்று இரவு முதல் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.குறிப்பாக சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், திருவல்லிக்கேணி,பட்டினப்பாக்கம் , நுங்கம்பாக்கம், சேப்பாக்கம் , கத்திப்பாரா, விமான நிலையம், தாம்பரம், பல்லாவரம், குன்றத்தூர், போரூர் , அண்ணாநகர், கோடம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பெருமபலான இடங்களில் இரவு முதலே கனமழை நீடித்தது.

    இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் விதமாக மாநகராட்சி அதிகாரிகள் பணிகளை துரிதப்படுத்தி வெள்ள நீரை அகற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் அதிகாரிகளின் கவனத்திற்கு வராத சென்னை மாநகராட்ச்சிப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் குறித்த புகார்களை தெரிவிக்க இலவச உதவி எங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி இருந்தாலோ,மரம் விழுந்திருந்தாலோ,மின்வெட்டு, மின்கசிவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டாலோ, 1913 என்ற உதவி என்னை தொடர்புகொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

    மேலும் 044-25619206, 044-25619207, 044-25619208 ஆகிய கூடுதல் எண்களும் அறிவிக்கப்பட்டு இந்த எண்களிலும் புகார் அளிக்கலாம். மேலும் மாநகராட்சியின் “நம்ம சென்னை செயலி” அல்லது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் வழியாகவும் பொதுமக்கள் தொடர்புக் கொள்ளலாம் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மு க ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....