Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'சேற்றை வாரி இறைத்தாலும் தாமரை மலரும்' - மோடி பேச்சு!

    ‘சேற்றை வாரி இறைத்தாலும் தாமரை மலரும்’ – மோடி பேச்சு!

    எதிர்க்கட்சிகள் எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் தாமரை மலரும் என மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

    குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

    அப்போது அவர், கடந்த 3 ஆண்டுகளில் 11 கோடி வீடுகளுக்கு நேரடியாக குடிநீரை கொண்டு சேர்த்திருப்பதாகவும் இருப்பினும், 2014 ஆம் ஆண்டு வரை வெறும் 3 கோடி வீடுகளில் தான் குடிநீர் இணைப்பு இருந்ததாகவும் தெரிவித்தார். 

    நாடாளுமன்றத்தில் சில உறுப்பினர்களின் செயல்பாடுகளும் அவர்கள் பயன்படுத்தும் மொழியும் வேதனைத் தருகிறது. நாட்டின் பிரச்சனைகளுக்கு நாங்கள் தீர்வுகளைக் கண்டு வருகிறோம் என பிரதமர் மோடி உரையில் குறிப்பிட்டார். 

    தொடர்ந்து பேசிய அவர், 2014 ஆம் ஆண்டு வரை நாட்டில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு வங்கிக் கணக்கு இருந்ததில்லை இருப்பினும் கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 48 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு இருப்பதாகவும், ஜன்-தன் வங்கி கணக்கு திட்டம் மூலமாக முறைகேடு தடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

    மேலும் எதிர்க்கட்சிகள் எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் தாமரை மலரும். மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல், பொன்னான நேரத்தை எதிர்க்கட்சிகள் வீணடித்து வருகின்றன என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.

    மகளின் பையில் கர்ப்பத்தை கண்டுபிடிக்கும் கருவி; பெற்றோர் செய்த கொடூரம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....