Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான திருமகன் ஈ.வெ.ரா கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தத் தொகுதி காலியானதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 18 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 

    இந்நிலையில், அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. 

    இதனிடையே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 

    வாக்குப்பதிவு வருகிற 27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை விதித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். 

    வாக்குப்பதிவு முடிந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகே கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடலாம். தடையை மீறி கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டால் 2 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    தென்காசியில் பிரபல பரோட்டா கடைக்கு சீல்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....