Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாசுவிஸ் வங்கியில் பண முதலீடு பற்றி தகவல் இல்லை - மத்திய நிதி அமைச்சர்

    சுவிஸ் வங்கியில் பண முதலீடு பற்றி தகவல் இல்லை – மத்திய நிதி அமைச்சர்

    சுவிஸ் வங்கியில் இந்திய குடிமக்கள் எவ்வளவு பணம் முதலீடு செய்துள்ளனர் என்பது பற்றிய சரியான தகவல் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    மக்களவையில் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 25) கூட்டத்தில் மக்களவை உறுப்பினர்களான தீபக் பைஜ் மற்றும் சுரேஷ் நாராயணன் ஆகியோர், “சுவிஸ் வங்கியில் இந்திய குடிமக்கள் எவ்வளவு பணம் டெபாசிட் செய்துள்ளனர். அந்தத் தொகை 2021-ம் ஆண்டு அதிகரித்துள்ளதா?” என பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாவது:

    சுவிட்சர்லாந்து நாட்டு பத்திரிகைகளில் வெளியிட்டு இருக்கும் தகவலின்படி சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் செய்யும் பணம் கருப்புப் பணம் என்று குறிப்பிடப்படவில்லை.

    சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் மற்றும் நிறுவனங்கள் எவ்வளவு பணம் டெபாசிட் செய்துள்ளனர் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை, ஆனால், 2021-ம் ஆண்டில் இந்த தொகை அதிகரித்துள்ளது என்பது மட்டும் தெரிகிறது.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....