Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமது குடித்துவிட்டு உயிரிழந்தால் அரசு சார்பில் இழப்பீடு வழங்க முடியாது- பிகார் முதல்வர்

    மது குடித்துவிட்டு உயிரிழந்தால் அரசு சார்பில் இழப்பீடு வழங்க முடியாது- பிகார் முதல்வர்

    மது குடித்துவிட்டு உயிரிழந்தால் அரசு சார்பில் இழப்பீடு வழங்க முடியாது என பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

    இன்று பிகார் சட்டமன்றத்தில் உரையாற்றிய மாநில முதல்வர் நிதீஷ் குமார், குடுத்திட்டு பலியானால், இழப்பீடு வழங்க முடியாது என்றும் தாங்கள் சொல்வது குடித்தால் உயிரிழப்பு உறுதி என்றும் தெரிவித்துள்ளார். 

    மேலும் குடிப்பதற்கு ஆதரவாகப் பேசுபவர்கள், மக்களுக்கு எந்த நல்லதையும் செய்யப்போவதில்லை என்றும் அதனால் மது குடிக்காமல் இருப்பது நல்லது என்றும் பீகார் முதல்வர் தெரிவித்தார். 

    மதுவிலக்கு சட்டம் தன்னுடைய விருப்பம் இல்லை என்று பதிவு செய்த அவர், மாநிலப் பெண்களின் நலனுக்காகவே மதுவிலக்கு சட்டம் கொண்டுவரப்பட்டதாகவும் கூறினார். 

    முன்னதாக நேற்று அவர் செய்தியார்களை சந்தித்து பேசுகையில், கள்ளச்சாராயம் குடிக்கும் எவர் ஒருவரும் செத்துப்போவார்கள் என்று வெளிப்படையாக கூறினார். அதோடு மாநிலத்தில் மது விலக்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் ஏராளமான மக்கள் பயன்பெற்றிருப்பதாகவும், பலர் குடிபழக்கத்தை விட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் சப்ரா கள்ளச்சாராயம் சம்பவம் குறித்தும் பேசியுள்ளார். 

    பிகாரில் மது விற்பனைக்கு தடை விதித்திருப்பதற்கு நிதீஷ் குமார் ஆதரவாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    படித்தால் தமிழுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பை முழுமையாக அறியலாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....