Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதித்தாரா, நிதின் கட்கரி?

    தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதித்தாரா, நிதின் கட்கரி?

    தேசிய நெடுஞ்சாலைத் துறையின் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், முடிக்கப்பட்ட திட்டங்களை தொடக்கி வைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் சென்னை வந்தார்.

    இவ்விழாவில் 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான உட்கட்டமைப்புத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேடையில் பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.

    காணொலி வாயிலாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துக் கொண்டார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டு நிகழ்ச்சி தொடங்கியது. இறுதியில் தேசிய கீதம் பாடப்பட்டது.

    தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது நிதின் கட்கரி அவர்கள் எழுந்து நிற்கவில்லை என்று கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது, எழுந்து நிற்காதது ஏன் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘தமிழ்த் தாய் பாடல் ஒலிக்கும் போது எழுந்து நிற்காமல், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதித்துள்ளார்.

    தன் ஆணவ, பொறுப்பற்ற செயலுக்கான காரணத்தை, அமைச்சர் மக்களுக்கு விளக்க வேண்டும். 2018-ல் ஐஐடியில் அவர் கலந்துக் கொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்ததும் இன்று அவர் நடந்துக் கொண்ட விதமும் எதேர்சையாக நடந்ததாக தெரியவில்லை’ என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்து இருக்கிறார் . அவர், “தொழில்நுட்பக் கோளாறு மற்றும் லிங்க் பிரச்சினை காரணமாகத்தான் நிதின் கட்கரி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் இருந்திருக்க வேண்டும்” என்கிறார். தமிழ்த்தாய் வாழ்த்தை நிதின் கட்கரி அவமதித்து விட்டார் என்ற கண்டனங்களுக்கு,”லிங்க் பிரச்சனை காரணத்தை தவிர வேறொன்றும் இருக்காது” என்று அண்ணாமலை விளக்கம் அளித்திருக்கிறார்.

    ஆனால, உண்மை என்ன என்பது குறித்து நிதின் கட்கரி விளக்க அளிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    தலைவரானார் அன்புமணி இராமதாஸ்; இனி பாமகவின் 2.0 வெர்ஷன் ஆரம்பம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....