Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உலகமே புத்தாண்டு கொண்டாட.. கொரியாவில் மட்டும் நிலைமையே வேறு..

    உலகமே புத்தாண்டு கொண்டாட.. கொரியாவில் மட்டும் நிலைமையே வேறு..

    நாம் 2022-ஐ கடந்து 2023-க்குள் நுழையப்போகிறோம். உலகம் முழுவதும் புத்தாண்டு வெவ்வேறு விதமாக கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் புத்தாண்டு என்பதே வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது. அந்தந்த நாடுகளில் கலாசாரம் சார்ந்து அந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் அமைகிறது. 

    இந்தியாவில் கூட கலாசாரம் சார்ந்து மாநிலங்களுக்கு இடையே புத்தாண்டு கொண்டாட்டங்கள் மாறுபடுகிறது. உதாரணத்திற்கு தமிழ் புத்தாண்டை சொல்லலாம்.  ஆனால், என்னதான் நாம் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடினாலும், இந்திய அளவில் ஆங்கில புத்தாண்டுதான் முதன்மை பெறுகிறுது. கொண்டாட்ட மனநிலையை அடைகிறது. 

    ஆங்கில புத்தாண்டிற்கு உண்டான அதே கொண்டாட்ட மனநிலையோடு சில நாடுகள் தங்களின் கலாசார புத்தாண்டை கொண்டாடுகின்றனர். அவற்றில் முக்கியமானது கொரியா. 

    கொரியாவை பொறுத்தவரையில், அங்குள்ள மக்கள் தங்களின் புத்தாண்டை சந்திரன் மற்றும் சூரியனை கண்காணித்து இயங்கும் சந்திர நாட்காட்டியின்படி கொண்டாடுகின்றனர். இதன்படி, கொரியாவில் புத்தாண்டானது ஐனவரி இறுதி மற்றும் பிப்ரவரி தொடக்கத்தில் பெரும்பாலும் வருகிறது. மேலும், கொரியர்கள் மூன்று நாள் தங்களின் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். 

    கொரியாவில் வருகிற ஜனவரி 22-ஆம் தேதி புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னதான 21-ஆம் தேதியும், இதற்கு பின்னான 23-ஆம் தேதியும் கொரியர்கள் தங்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருப்பர். 

    அதேசமயம், கொரியாவில் ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டைக் கடைப்பிடிப்பவர்களும் சிலர் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    ஒரே கதை ஆனாலும் வெற்றிப்பெற்ற அவதார்; ஒரு கடந்த கால பயணம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....