Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000' - என்ன சொல்கிறார் நிதியமைச்சர்?

    ‘குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000’ – என்ன சொல்கிறார் நிதியமைச்சர்?

    தமிழகத்தில் பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை எப்போது என்பது குறித்த கேள்விக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் தெரிவித்துள்ளார். 

    திமுக அரசு ஆட்சி அமைவதற்கு முன்பு 505 வாக்குறுதிகளை கொடுத்தது. இந்நிலையில் இந்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டதாக திமுகவினர் கூறி வருகின்றனர். அதில் முக்கியமானவையாக பார்க்கப்பட்டவைகளில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதியும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் அடங்கும்.

    இருப்பினும் திமுக அரசு இந்த முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதன் காரணமாக திமுக அரசுக்கு எதிரான பல விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. 

    இதில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தேர்தல் சமயத்தில் பெண்களைக் பெரிதாகக் கவர்ந்தது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த வாக்குறுதி இன்னுமும் நிறைவேற்றப்படவில்லை.

    இதனிடையே, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மகளிருக்கு உரிமை தொகை தரும் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு பணி 85 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அறிவிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என்றும் தெரிவித்துள்ளார். 

    பருவமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு; அன்புமணி வலியுறுத்தல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....