Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஏர் இந்தியாவில் புதிய உணவு வகைகள்; மணக்கும் மீன் குழம்பும் செட்டிநாடு சிக்கனும்

    ஏர் இந்தியாவில் புதிய உணவு வகைகள்; மணக்கும் மீன் குழம்பும் செட்டிநாடு சிக்கனும்

    மீன் குழம்பு, செட்டிநாடு சிக்கன், மலபார் சிக்கன் போன்ற உணவு வகைகளை ஏர் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

    ஏர் இந்தியா நிறுவனம் தனது உள்நாட்டு பயணிகளுக்காக பிரேத்யேகமான உணவு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

    டாடா குழுமத்தின் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்யும் பிசினஸ் வகுப்பு (Business Class) பயணிகளுக்கான இந்த புதிய உணவு வகைகள் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

    இந்த புதிய உணவு வகைகளில் வகுப்பு உள்நாட்டு பயணிகளுக்காக ஆலு பரோட்டா, மெது வடை மற்றும் பொடி இட்லி ஆகியவை காலை உணவாக வழங்கப்படும்.

    இதையும் படிங்க:5 மணி நேரத்தில் 50 லட்சம் பனைவிதைகள் நடும் பணி: நிறைவேறுமா அரசின் எண்ணம் ?

    இதுமட்டுமின்றி சர்க்கரை இல்லாத டார்க் சாக்லேட் ஓட்மீல் மஃபின், சீஸ் மற்றும் ட்ரபிள் ஆயில் துருவல் முட்டை, கடுகு கிரீம் தடவப்பட்ட சிக்கன் சாசேஜ் போன்ற உணவு வகைகளும் பிசினஸ் வகுப்பு பயணிகளுக்கான உணவு வகைகளில் இடம்பெற்றுள்ளன. 

    அதேப் போன்று, எகானமி வகுப்பு (Economy Class) வாடிக்கையாளர்களுக்கு சீஸ் காளான் ஆம்லெட், ட்ரை ஜீரா ஆலு குடைமிளகாய், பூண்டு தோசை மற்றும் சோளம் தோசை போன்றவை காலை உணவாக வழங்கப்பட இருக்கிறது. 

    மேலும் வெஜிடபிள் பிரியாணி, மலபார் சிக்கன் கறி, வெஜிடபிள் பொரியல், வெஜிடபிள் ப்ரைடு நூடுல்ஸ், சில்லி சிக்கன், ப்ளூபெர்ரி வெண்ணிலா பேஸ்ட்ரி போன்றவை மதிய உணவாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உள்நாட்டு விமான பயணிகளுக்கு புதிய உணவு வகைகளை ஏர் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....