Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதிருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்களுக்காக புதிய முன்னேற்பாடுகள்

    திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்களுக்காக புதிய முன்னேற்பாடுகள்

    திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த சோதனை முறையில் பிரமோற்சவம், புரட்டாசி மாதம் முடிந்து பல மாற்றங்களை புகுத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    தரிசனத்தின் போது பல மணி நேரம் ஒரே இடத்தில் காத்திருப்பதை தவிர்க்க நேர ஒதுக்கீடு செய்யும் சர்வ தரிசன டிக்கெட்டுகளை வழங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

    திருப்பதியில் தினமும் 20,000 டிக்கெட்டுகள் தரப்பட்டு, ஒதுக்கீடு செய்த நேரத்தில் திருமலை சென்று, இரண்டு மணி நேரத்தில் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அதேபோல், விஐபி தரிசனம் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை தரும் பக்தர்களுக்கு, காலை நேரத்தில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    இரவு தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருப்பதை தவிர்க்க, விஐபி தரிசனத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, விஐபி தரிசன டிக்கெட்டுகளை அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திருமலைக்கு வந்த பிறகு, அங்கு தங்கும் அறை பெற காத்திருப்பதும் அறை கிடைக்காமல் தவிப்பதும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வரும் நிலையில், இனி திருப்பதியிலேயே அறைகள் ஒதுக்கீடு செய்து, அதற்கான ரசீது சீட்டு வழங்கி திருமலைக்கு அனுப்பும் திட்டமும் செயல்படுத்தப்பட இருக்கிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....