Tuesday, March 26, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்நேபாளத்தில் நிலநடுக்கம்; ஒருவர் பலி

    நேபாளத்தில் நிலநடுக்கம்; ஒருவர் பலி

    நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு ஒருவர் பலியாகியுள்ளார். 

    நேபாளத்தில் நேற்று சுதூர்பஸ்சிம் மகாணம், படா மாவட்டத்திலுள்ள மேளா என்னுமிடத்தில் மதியம் 2.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.9 அலகுகளாகப் பதிவானது. நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்திய தலைநகர் தில்லி வரை உணரப்பட்டது. 

    நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மேற்கு நேபாளம் குலுங்கியது. ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இச்சம்பவத்தின்போது, நேபாளத்தின் காவ்முல் கிராம நகராட்சி-2 பகுதியில் புல்வெட்டிக் கொண்டிருந்த 35 வயது பெண், நிலநடுக்கத்தால் உயரத்திலிருந்து உருண்டு வந்த பாறை மோதி உயிரிழந்தார்.

    இதுமட்டுமல்லாமல், நிலநடுக்கத்தின் விளைவாக ஏற்பட்ட நிலச்சரில் 40 ஆடுகள் இறந்தன என்றும், மக்கள் சிலர் காயமடைந்துள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக, கடந்த 2015-ஆம் ஆண்டு 7.8 ரிக்டர் அளவில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 9,000 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

    சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் மருத்துவ இயக்குனரக அதிகாரிகள் விசாரணை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....