Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்திய வீரர் சுப்மன் கில்லுக்கு கிடைத்த பெருமை..

    இந்திய வீரர் சுப்மன் கில்லுக்கு கிடைத்த பெருமை..

    மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற சாதனையை சுப்மன் கில் புரிந்துள்ளார். 

    நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றிப்பெற்றது. 

    இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் சதமடித்தனர். 

    இதில் சுப்மன் கில் அடித்த சதம் அவரை ஒரு முக்கிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆக்கியுள்ளது. அதன்படி,  மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற சாதனையை சுப்மன் கில் புரிந்துள்ளார்.

    மூன்று போட்டிகள் கொண்ட நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஷுப்மன் கில் 360 ரன்கள் எடுத்துள்ளார். இதேபோல மூன்று போட்டிகள் கொண்ட மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸ்மும் 360 ரன்களை எடுத்திருந்தார். இதன் மூலம், சுப்மன் கில் பாபர் ஆஸமின் சாதனையை சமன் செய்துள்ளார். 

    மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்த பேட்டர்கள்; 

    360 – பாபர் ஆஸம் VS மே.இ. தீவுகள்

    360 – ஷுப்மன் கில் VS நியூசிலாந்து

    349 – இம்ருல் கைஸ் VS ஜிம்பாப்வே

    342 – குயிண்டன் டி காக் VS இந்தியா

    330 – மார்டின் கப்தில் VS இங்கிலாந்து

    மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய பேட்டர்கள்; 

    360 – சுப்மன் கில் VS நியூசிலாந்து, 2023

    357-விராட் கோலி VS ஆசியக் கோப்பை, 2012

    283- ஷிகர் தவன் VS இலங்கை, 2014

    283-விராட் கோலி VS இலங்கை, 2023

    273-ரோஹித் சர்மா VS இலங்கை, 2014

    திருப்பதி லட்டு வழங்கும் மையத்தில் கொள்ளைச் சம்பவம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....