Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநீட் தேர்வுக்கான தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டிற்கு விலக்கு உண்டா?

    நீட் தேர்வுக்கான தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டிற்கு விலக்கு உண்டா?

    நாடு முழுவதும் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு சேர பொதுவாக இந்த நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நீட் நுழைவுத் தேர்வு வருகின்ற ஜூலை மாதம் 17 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

    இந்த நீட் நுழைவுத் தேர்வு 2013 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மாணவர்கள் இந்த நீட் தேர்வினால் உயிர் துறக்கும் நிலைக்கு தள்ளப்படுவதால் இந்த நீட் தேர்வு வேண்டாம் என்று அனைத்துக் கட்சிகளும் சம்மதித்து சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் இந்த தீர்மானத்தை இன்னும் குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. 

    இந்நிலையில் தேசியத் தேர்வு முகமை நீட் நுழைவுத் தேர்வுக்கான தேதியை அறிவித்துள்ளது. எம் பி பி எஸ் மற்றும் பி டி எஸ் போன்ற இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் ஏப்ரல் 2 முதல் மே 7 வரை தேர்வுக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக பூர்த்தி செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 17 ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கும்போது ஏதேனும் பிழை ஏற்பட்டால் அதனை சரி செய்துகொள்ள 5 நாள் கால அவகாசம் வழங்கப்படும் என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

    கடந்த நீட் நுழைவுத் தேர்வுக்கு 16 லட்சத்து 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தார்கள். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமான மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  இத் தேர்வானது தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.  

    தமிழ்நாட்டிற்கு நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுமா இல்லை மாணவர்கள் தேர்வினை எழுதுவார்களா போன்ற குழப்பங்கள் நிலவி வருகிறது. நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட்டால் பழைய முறையான 12 ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் எப்போதும் போல மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....