Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதேசிய விளையாட்டு தினம்.. பிரதமர் மோடி வாழ்த்து!

    தேசிய விளையாட்டு தினம்.. பிரதமர் மோடி வாழ்த்து!

    தேசிய விளையாட்டு தினம் மற்றும் மேஜர் தியான் சந்த் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    நாட்டில் தேசிய விளையாட்டு தினம் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 29-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், ஆக்கி விளையாட்டின் தலைசிறந்த வீரரான மேஜர் தியான சந்த் என்று அறியப்படும் தியான சிங்கின் பிறந்த நாளும் இன்று கொண்டாடப்படுகிறது. 

    ஆக்கி விளையாட்டில், ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு 3 தங்கப் பதக்கங்களை வெல்ல உதவியவர் தியான் சந்த். இதன்படி அவர் 1928, 1932 மற்றும் 1936 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதற்கு பெரும் பங்காற்றினார். 

    1979-ம் ஆண்டு தியான சந்த் மறைந்தபோது, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தில்லி தேசிய விளையாட்டு அரங்கம் பின்பு, மேஜர் தியான சந்த் விளையாடடு அரங்கம் என்று பெயர் மாற்றப்பட்டது. அவரை கவுரவிக்கும் வகையில், கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினம் என அறிவிக்கப்பட்டது. 

    இந்நிலையில், இன்று தியான சந்த் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘தேசிய விளையாடடு தினம் மற்றும் மேஜர் தியான சந்த் பிறந்த நாளை முன்னிட்டு, எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். விளையாட்டுகள் சமீபத்திய ஆண்டுகளில் மிக சிறந்த ஒன்றாக உள்ளன. இந்த நிலை தொடர வேண்டும். நாடு முழுவதும் விளையாட்டு பிரபலமாக வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....