Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் 40 இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை..காரணம் என்ன?

    தமிழகத்தில் 40 இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை..காரணம் என்ன?

    கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் 40 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

    கடந்த அக்டோபர் மாதம் கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தக் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபீன் என்ற நபர் உயிரிழந்தார். இவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியதில் ஏராளமான வெடிப்பொருட்களும் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. 

    இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக முகமது தல்கா வயது 25, முகமது அசாருதீன் வயது 23, முகமது ரியாஸ் வயது 27, பெரோஸ் இஸ்மாயில் வயது 27, முகமது நவாஸ் இஸ்மாயில் வயது 26, அப்சர்கான் வயது 28, சேக் இதயத்துல்லா, சனோபர் அலி உள்பட ஆகிய 11 நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்

    இந்தச் சம்பவம் தொடர்பாக பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை முதல் தமிழகம், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகப்படும் 60 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் 40 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. 

    மேற்கிந்திய தீவுகளுடன் மோதும் இந்தியா; வெற்றிப் பயணம் தொடருமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....