Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'பா.ரஞ்சித் என் பேஸ்புக் நண்பர்' - இயக்குநர் மோகன்.ஜி பேச்சு!

    ‘பா.ரஞ்சித் என் பேஸ்புக் நண்பர்’ – இயக்குநர் மோகன்.ஜி பேச்சு!

    பா.ரஞ்சித் பட்டியலின மக்களுக்கும் நான் ஓபிசி தரப்பினருக்கும் படம் எடுப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அதில் உண்மையில்லை என இயக்குநர் மோகன்.ஜி தெரிவித்துள்ளார். 

    ‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய மோகன்.ஜி, இயக்குநர் செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ள ‘பகாசூரன்’ என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    நடிகர் நடராஜ், ராதாரவி, கே.ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு சாம்.சிஎஸ் இசைமையத்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிவந்த இத்திரைப்படத்தின் டீசர் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, ‘பகாசூரன்’ திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், பகாசூரன் திரைப்படம் வருகிற 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது அறிவிக்கப்பட்டு, அதற்கான புரோமஷன் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதனின் ஒரு பகுதியாக, பகாசூரன் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். 

    இச்சந்திப்பில் மோகன்.ஜி தெரிவித்துள்ளதாவது;

    பகாசூரன் யார், எப்படிப்பட்டவன் என்பது படம் பார்க்கும்போது தெரியும். இது எந்த சமூகத்துக்கும் எதிரான படம் இல்லை. எல்லாருக்குமான படம் இது. பா.ரஞ்சித் பட்டியலின மக்களுக்கும் நான் ஓபிசி தரப்பினருக்கும் படம் எடுப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அதில் உண்மையில்லை.

    பா.ரஞ்சித் என் பேஸ்புக் நண்பர். சினிமாவில் நான் யாரையும் எதிரியாக பார்க்கவில்லை. சில செய்திகளின் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொண்டு இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன்.

    சினிமாவில் சமநிலை வேண்டும். இயக்குநர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. என் பொறுப்பு அதிகமாகியுள்ளதாக உணர்கிறேன். சமூகத்துக்குத் தேவையான படங்களைத் தொடர்ந்து எடுப்பேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    வசூலில் பிகிலை முந்தியதா வாரிசு? – வெளியான தகவல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....