Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுமேற்கிந்திய தீவுகளுடன் மோதும் இந்தியா; வெற்றிப் பயணம் தொடருமா?

    மேற்கிந்திய தீவுகளுடன் மோதும் இந்தியா; வெற்றிப் பயணம் தொடருமா?

    மகளிருக்கான இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி இன்று மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்கிறது. 

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் மகளிருக்கான இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 10-ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் தொடங்கியது.  இத்தொடரில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. 

    இந்த மகளிர் உலகக் கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

    இந்நிலையில், இன்று மகளிர் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொள்கிறது. இந்திய அணி பாகிஸ்தானை வென்ற உத்வேகத்துடன் இப்போட்டியில் களமிறங்க உள்ளது. 

    அதேநேரம், மேற்கிந்தியத் தீவுகளோ இங்கிலாந்திடம் கண்ட தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் இன்றையப் போட்டியில் களமிறங்க உள்ளது. 

    பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக ஸ்மிருதி பங்கேற்காத நிலையில், இன்றையப் போட்டியில் இந்திய அணி சார்பில் ஸ்மிருதி மந்தனா களமிறங்க உள்ளார். 

    இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கான போட்டி கெப்டவுன் மைதானத்தில் இன்று மாலை 6.30 மணியளவில் தொடங்க உள்ளது. லைவ் ஸ்ட்ரிமிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் செய்யப்படுகிறது. 

    துருக்கி நிலநடுக்கம்: 40,000-த்தை கடந்த பலி எண்ணிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....