Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுடெஸ்ட்டில் புஜாரா புரியப்போகும் சாதனை; வாழ்த்திய பிரதமர் மோடி!

    டெஸ்ட்டில் புஜாரா புரியப்போகும் சாதனை; வாழ்த்திய பிரதமர் மோடி!

    புஜாரா 100-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள நிலையில், மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

    ஆஸ்திரேலிய அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிப் பெற்றது. 

    இதைத்தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 17-ஆம் தேதி தில்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி இந்திய வீரர் புஜராவுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும். 

    இந்த மைல்கல்லை எட்டும் 13-வது இந்தியர் என்ற பெருமையை புஜாரா பெறுகிறார். புஜாரா டெஸ்டில் இதுவரை 99 டெஸ்டுகளில் விளையாடி 19 சதம், 34 அரைசதம் உள்பட 7,021 ரன்கள் எடுத்துள்ளார். 

    இந்நிலையில் புஜாரா நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்த்தித்தார். இது குறித்து இந்திய பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதவில், புஜாரா உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்களின் 100வது டெஸ்ட் போட்டிக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

    மேற்கிந்திய தீவுகளுடன் மோதும் இந்தியா; வெற்றிப் பயணம் தொடருமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....