Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதேசிய கீதத்தை அவமதித்தாரா முதன்மை கல்வி அலுவலர்; உருவான சர்ச்சை!

    தேசிய கீதத்தை அவமதித்தாரா முதன்மை கல்வி அலுவலர்; உருவான சர்ச்சை!

    தேசிய கீதத்தை அவமதிக்கும் விதமாக முதன்மை கல்வி அலுவலர் செல்போனில் பேசிக் கொண்டிருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    திருவள்ளூர் நகராட்சி சத்தியமூர்த்தி தெருவில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் தனியார் நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்களை திரும்பப்பெற்று, மறுசுழற்சி செய்து பள்ளிக்கு தேவைப்படும் உபகரணங்களை செய்து தரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலர் ராமன், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் தேன்மொழி மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். 

    இந்நிகழ்ச்சி முடிந்து மாணவ-மாணவிகள், அரசு அதிகாரிகள், நகராட்சி நிர்வாகிகள் என அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதம் பாடினர். அப்போது தேசிய கீதத்தை அவமதிக்கும் விதமாக முதன்மை கல்வி அலுவலர் ராமன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். 

    மாணவ-மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அரசு அதிகாரி, தேசிய கீதத்தை அவமதித்து செல்போனில் உரையாடிக்கொண்டிருந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

    சில நாட்களுக்கு முன்பு தேசிய கீதத்தை அவமதித்து செல்போனில் பேசிக் கொண்டிருந்த காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    லவ்டுடே ரசிகர்களுக்கு அடுத்தடுத்த சர்ப்ரைஸ்: வெளியான மேக்கிங் வீடியோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....