Saturday, March 16, 2024
மேலும்
    Homeஅறிவியல்நேருக்கு நேராக மோத உள்ள சிறுகோளும் விண்கல்லும் - எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள செப்.27

    நேருக்கு நேராக மோத உள்ள சிறுகோளும் விண்கல்லும் – எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள செப்.27

    அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வரும் செப் 27-ஆம் தேதி சிறுகோள் ஒன்றின் மீது, விண்கல்லை மோத வைத்து, அதனை நேரலையாக ஒளிபரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. நாசாவின் இந்த அறிவிப்பு பலரிடத்திலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி விரைவாக வந்து கொண்டிருப்பதாகவும், அது பூமியை தாக்கத்தினால் மிகப்பெரிய பேரழிவுகளை உண்டாக்கும் என்றும், அவ்வப்போது வரும் செய்திகளை நாம் பார்க்கவோ, படிக்கவோ தவறுவதில்லை. இன்னும் சிலர் இதுபோன்ற செய்திகளை 10-தோடு 11-றாக சாதாரண விஷயமாக நினைத்து கடந்து போய்விடுவார்கள். ஆனால், அதனுடைய பாதிப்பு எந்த அளவில் இருக்கும் என்பதை நம்மில் பலரும் உணருவது இல்லை.

    அப்படியான ஒரு நிகழ்வை கொண்ட செய்தியைத்தான் நாம் இங்கு காண இருக்கிறோம்.

    உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் இந்த பூமியில் மனித இனம் ஆபத்துகள் இல்லாமல் உயிர் வாழ்வதை உறுதி செய்யும் முயற்சியிலும், பிரபஞ்ச ரகசியங்களை எல்லோருக்கும் தெரியும் வகையில் அதனை வெளிக்கொண்டு வரும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டேதான் இருக்கின்றனர். அப்படிப்பட்ட நிலையில், பிரபஞ்சத்தில் இருக்கும் பல கோள்களால், அதாவது கிரகங்களால் பூமிக்கு பல ஆபத்துகள் வரும் நிலை உள்ளன.

    அதில், பெரும்பாலானவை நம் கண்ணுக்கு புலப்படாத அதிசயங்களாகவும் இருக்கும். பொதுவாகவே ஒரு மனிதன் வானில் இருந்து எப்போது என்ன வரும் என்று ஆராய்ந்து கொண்டேதான் இருப்பான். நம் கண்களும் வானத்தை ஆராய்ந்த படியேதான் இருக்கும். ஏனென்றால், நாம் வாழும் இந்த உலகம் பல ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் உள்ளடக்கியது. அப்படிப்பட்ட அந்த பிரபஞ்ச உலகத்தினுள் இருக்கும் கோள்களை பற்றிய ஆய்வுகளை நாசா தொடர்ந்து மேற்கொண்டு, அது குறித்த தகவல்களை மக்களுக்கு தெரிவித்துக் கொண்டேதான் வருகிறது.

    அதன் அடிப்படையில், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா விண்வெளியில் இருந்து பயணித்து, பூமி மீது மோதக் காத்திருக்கக்கூடிய ஆஸ்ட்ராயிட்ஸ் (asteroids) என்ற சிறுகோள்கள் பற்றிய தகவல்களை அவ்வப்போது வெளியிட்டுக்கொண்டே தான் இருந்தது .அந்த அறிவிப்பின் முதல் படியாக கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி பூமியை நோக்கி வந்த ஆஸ்ட்ராய்டு என்ற ஒரு பாறை செல்யாபின்ஸ்க் என்ற நகரத்தை நெருங்குமுன், வானில் வெடித்துச் சிதறி நெருப்புக் கோளங்களாக யூரல் மலைத் தொடர் பகுதியில் எரிந்துபோனதாகப் பதிவிடப்பட்டுள்ளது.

    பூமிக்கு மேல் 20 கி.மீ. தொலைவில் வெடித்த இந்த பாறையின் துகள்கள் செல்யாபின்ஸ்க் நகரில் பல இடங்களில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல, காலங்காலமாக பல சிறிய பாறைகள் பூமியை நோக்கி வந்தாலும், அவை பூமியின் கடைசி பகுதியை வந்தடையாமல், அதைச் சுற்றியுள்ள வளிமண்டலப் பகுதிகளிலேயே, எரிந்து போவதாக நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    இந்நிலையில், பூமியை நோக்கி வரும் ஆஸ்ட்ராயிட்ஸ் என்ற பாறைகள் அல்லது சிறு கோள்கள் குறித்த அறிவிப்பை ஏற்கனவே நாசா வெளியிட்டு, அதற்காக டார்ட் (DART -Double Asteroid Redirection Test) என்ற செயல் திட்டத்தை தொடங்கி அதற்கான வேலைகளை செய்து வந்தது. தற்போது அந்த பாறைகளால் பூமிக்கு ஏற்பட உள்ள மிகப்பெரிய அழிவை தடுக்கும் நோக்கில், விண்வெளியிலுள்ள ஆஸ்ட்ராயிட்ஸ் என்ற உண்மையான பாறை ஒன்றின் மீது ஸ்பேஸ் கிராப்ட் எனப்படும் விண்கலம் ஒன்றை மோதச்செய்து, அந்த பாறைகளின் திசையை மாற்றும் முயற்சியில் நாசா இறங்கியுள்ளது. அந்த நிகழ்வை வரும் செப். 27 ஆம் தேதி செயல்படுத்தப்பட உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இந்நிகழ்வை நேரலையாகவும் ஒளிபரப்ப உள்ளது.

    இதற்காக டிமார்போஸ் (Dimorphos) என்ற ஒரு ஆஸ்ட்ராய்டு பாறையை நாசா தேர்வு செய்துள்ளது. இது சுமார் 160 மீட்டர் விட்டத்தை உடையது. பூமியிலிருந்து 11 மில்லியன் கி.மீ. தொலைவிலுள்ள, இந்த டிமார்போஸ் என்ற பாறை, பூமியின் மீது மோதக்கூடிய வாய்ப்புகள் இல்லை என்றபோதும் சோதனைக்காக, இந்தப் பாறை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பாறை மீது மோதி, அதன் பாதையைத் திசை திருப்ப, 330 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

    மேலும், ஒரு சிறிய மோட்டார் காரின் அளவில், ஸ்பேஸ் கிராப்ட் விண்கலம் ஒன்று சுமார் பத்து மாதங்களுக்கு முன் டார்ட் (DART) என்ற பெயரில் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டிடிமோஸ் (Didymos) என்று பெயரிடப்பட்டுள்ள 2600 அடி விட்டம் கொண்ட இந்த டார்ட் (DART) விண்கலம் மூலம் நாசா, நிலவு வடிவத்தை கொண்ட 525 அடி டிமார்போஸை தாக்க குறிவைத்துள்ளது.

    இந்த சோதனை குறித்து ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி பாபி ப்ரான், “இது கோள்களில் இருந்து நம்மைப் பாதுகாக்க எடுக்கப்படும் மனித குலத்தின் முதல் முயற்சி” என தெரிவித்துள்ளார் .

    அதேபோல், டார்ட் (DART) என்ற விண்கலம் மணிக்கு 21000 கி.மீ. வேகத்தில் போய் பாறை மீது மோதி, பாறை சுழலும் பாதையின் திசையைத் திருப்பும். இந்த நிகழ்வுகள் அனைத்தும் அங்கிருந்து வரும் படங்கள் மூலமாகவும், பூமியிலிருக்கும் தொலைநோக்கிகள் மூலமாகவும் கண்காணிக்கப்படுமாம். இந்த அறிய நிகழ்வை ஒட்டு மொத்த விஞ்ஞான உலகமும், மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....