Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமியான்மர் விவகாரம்: இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை

    மியான்மர் விவகாரம்: இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை

    மியான்மரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். 

    மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை விடுவித்து தாயகத்திற்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதினார். அதேபோல், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு உட்பட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மியான்மர் நாட்டில் சிக்கி தவிக்கும் பொறியாளர்களை விரைந்து மீட்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினர். 

    இந்நிலையில், மியான்மரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் முரளிதரன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

    மியான்மரில் உள்ள இந்தியர்கள் குறித்து நமது தூதர் வினய் குமாரிடம் பேசினோம். இந்தியர்களை மீட்பதற்கான முன்னேற்றங்கள் குறித்து தூதர் என்னிடம் விவரித்தார். மேலும், இந்தியர்களை விரைவில் விடுவிக்க அனைத்து முயற்சிகளும் நடந்து வருவதாகத் தெரிவித்தார்.

    இந்த விஷயத்தை மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: தரவரிசையில் முன்னேறிய மந்தனா…உற்சாகத்தில் ரசிகர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....