Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்அஜித்குமார் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி....உள்ளே ஃப்ரஸ்ட் லுக்!

    அஜித்குமார் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி….உள்ளே ஃப்ரஸ்ட் லுக்!

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளிவந்துள்ளது.

    தென்னிந்திய நடிகர்களுள் மிக முக்கியமான ஒருவர், அஜித்குமார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த வலிமை திரைப்படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆயினும் வசூலில் பெரும் வேட்டையை நிகழ்த்தியது. இந்நிலையில், வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் போனி கபூர் தயாரித்து எச்.வினோத் இயக்கும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். 

    இத்திரைப்படத்திற்கு முதலில் தற்காலிகமாக ஏகே-61 என்று பெயரிடப்பட்டது. இப்படத்திற்காக அஜித்குமார் இருக்கும் தோரனை அஜித் ரசிகர்களை மட்டும் இன்றி, அனைத்து தமிழ் திரையுலக ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. தற்போது, இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடந்துவருகிறது. 

    ஏகறலனவற

    இந்நிலையில் ‘ஏகே 61’ திரைப்படத்தின் நிரந்தர தலைப்புச் சார்ந்து பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்று வந்தன. ‘துணிவு’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகல்கள் வேகமாக பரவின. 

    இப்படியான சூழலில் அஜித்குமார் ரசிகர்களுக்கு பேரின்பத்தை தரும் வகையில் ‘ஏகே 61’ திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் யோசித்தது போலவே ‘ஏகே 61’ திரைப்படத்தின் பெயர் ‘துணிவு’ என்றே அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிவந்துள்ள ஃப்ர்ஸ்ட் லுக்கை ரிசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

    இதையும் படிங்க: 19 வருடங்களுக்கு பிறகு வியந்த ஹாரிஸ் ஜெயராஜ்…. நா.முத்துகுமார் செய்த சம்பவம் அப்படி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....